HI-TECH POLYTECHNIC COLLEGE

CHAIRMAN MESSAGE
ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் இருந்து எங்களது TTN குழுமத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவது மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்க்கைக்கான முழுமையான கற்றல் அனுபவத்தையும் வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.
எங்கள் கல்லுரியானது இளைஞைர்களையும் பெண்களையும் கல்வி ரீதியாகவும் , தொழில் ரீதியாகவும் மற்றும் சமூகரீதியாகவும் வடிவமைக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.மேலும் சிறந்த உலகத்தை உருவாக்கும் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்குகிறது.மாணவர்கள் வேலைவாய்ப்பை தேடுவதை தவிர்த்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்க வழிநடந்துகின்றோம்.
Er.T.Lawrence,BE.,

CORRESPONDENT MESSAGE
“உண்மையான கல்வியின் குறிக்கோள் நுண்ணறிவு மற்றும் பண்பு” -மார்ட்டின் லூதர் கிங்
மாணவர்கள் தங்களது இலக்கை அடைய கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சிகள், ஆளுமை மேம்பாடு மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவை கல்வித்துறையில் அனுபவமிக்க கல்லுரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களால் வழிநடத்தப்படுகிறார்கள் .நேர்மை மற்றும் கடின உழைப்பால் உங்கள் கனவுகள் எதிர்காலத்தில் நனவாகும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஓவ்வொரு மாணவரும் தங்கள் பெற்றோருக்கு மட்டுமின்றி ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
Mrs.L.Helen Lawrence,MA.,Lit.,

PRINCIPAL MESSAGE
எமது கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களை சமுதாயத்தில் ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் நோக்கத்துடன் கடின உழைப்போடு செயல்பட்டு வருகின்றனர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.2021-22 ஆம் கல்வியாண்டில் நமது ஹைடெக் பாலிடெக்னிக் கல்லுரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுப்பாக வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இக்கல்வியாண்டில் சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Dr.G.SureshThangarajThomson,BE.,ME.,MBA.,MS.,Phd.,
